இறுவெட்டு
அருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031
அன்னதான சபை

//people.panipulam.net/#!album-707

//people.panipulam.net/#!album-706

//people.panipulam.net/#!album-701

//people.panipulam.net/#!album-699

13501948_1330272250320490_1627884392464552590_nஈழத்திருநாட்டின் சிரசாம் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாண நன்நகரின் முகமென தோன்றும் மேற்குக் கரையோரத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க ஜம்புகோளத்துறையை அண்டிய பண்டத்தரிப்புப் பிரதேசத்தில் செந்நெல் கொழிக்கும் தும்பளப்பாய் வயல் வெளியுடன் கூடிய சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஒரு அழகிய கிராமம் சாந்தையாகும். இங்கு கோயில் கொண்டிருப்பவர் அருள்மிகு சித்தி விநாயகராவார். இக் கோயில் எந்தக் காலத்தது என்பது திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. எனினும் இலங்கையின் சரித்திரத்தை ஆராயும் பொது இது மிகவும் பழமை வாய்ந்தத்தாகக் கருத இடமுண்டு.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு இலங்கையை ஆண்ட மன்னன் தேவநம்பியதீசன் இந்துசமயத்தவன். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஒரு நாகரீக இனம் நாகர் இனமாகும். இவர்களும் இந்து சமயிகளாவர். அனுராதபுரத்தை ஆண்ட மூத்த சிவன் யாழ்பாணத்தின் கதிரமலையின் அரசாண்ட நாகர் குலத்தில் திருமணம் செய்தான் எனவும், அவர்களின் புதல்வனே தேவநம்பியதீசன் எனவும் மிகப்பழம் சிங்கள இலக்கிய நூலாகிய மகாவம்சம் கூறுகிறது.

Read the rest of this entry »

 

ஒருமுறை நாரதர் ஒரு மாம்பழத்தை சிவபெருமானுக்குக் கொடுத்தார். உடனே சிவபெருமான் அந்த மாம்பழத்தை தம் மகன்களில் யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் யோசனை கேட்டார். உடனே பிரம்மன் முருகப்பெருமானுக்கு அளிக்கலாம் என்று சொல்ல அதனைக் கேட்ட விநாயகர் கோபம் கொண்டார்.

அந்த நிகழ்ச்சிகளைக் கண்டு சந்திரன் சிரித்தான். இதனால் விநாயகருக்கு மேலும் கோபம் வந்து விட்டது. “பெரியோர் முன்னிலையில் என்னைச் சிரித்து கேலி செய்த உனது ஒளி உலகில் பரவாதிருக்கக் கடவது” என சபித்தார். பிறகு அவர் அதற்கொரு பரிகாரமும் சொன்னார்.

ஆவணி சதுர்த்தியன்று சந்திரனைப் பாராமல் தன்னைச் சிறப்பாக பூஜிக்கின்றவர்கள் தம் அருளைப் பூரணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனகூறி அருளினார். அது முதல் ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு தோன்றியது.

சங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். Read the rest of this entry »

//foto.saanthaipillayar.com/#!album-219

//foto.saanthaipillayar.com/#!album-218

//foto.saanthaipillayar.com/#!album-217

//foto.saanthaipillayar.com/#!album-216

//foto.saanthaipillayar.com/#!album-215

பூசை நேரங்கள்
poshai
தேர்த்திருப்பணி சபை
பலஸ்தாபன நிகழ்வு
ஆறுமுகநாவலர்
Jothidam
தமிழில் எழுத
பிள்ளையார் கதை
DSC08079-Max-Width-640-Max-Height-480" alt="" width="175" class="aligncenter" />