ஆலய வரலாறு
ஈழத்திருநாட்டின் சிரசாம் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாண நன்நகரின் முகமென தோன்றும் மேற்குக் கரையோரத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க ஜம்புகோளத்துறையை அண்டிய பண்டத்தரிப்புப் பிரதேசத்தில் செந்நெல் கொழிக்கும் தும்பளப்பாய் வயல் வெளியுடன் கூடிய சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஒரு அழகிய கிராமம் சாந்தையாகும். இங்கு கோயில் கொண்டிருப்பவர் அருள்மிகு சித்தி விநாயகராவார். இக் கோயில் எந்தக் காலத்தது என்பது திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. எனினும் இலங்கையின் சரித்திரத்தை ஆராயும் பொது இது மிகவும் பழமை வாய்ந்தத்தாகக் கருத இடமுண்டு.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு இலங்கையை ஆண்ட மன்னன் தேவநம்பியதீசன் இந்துசமயத்தவன். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஒரு நாகரீக இனம் நாகர் இனமாகும். இவர்களும் இந்து சமயிகளாவர். அனுராதபுரத்தை ஆண்ட மூத்த சிவன் யாழ்பாணத்தின் கதிரமலையின் அரசாண்ட நாகர் குலத்தில் திருமணம் செய்தான் எனவும், அவர்களின் புதல்வனே தேவநம்பியதீசன் எனவும் மிகப்பழம் சிங்கள இலக்கிய நூலாகிய மகாவம்சம் கூறுகிறது.
சரித்திர நோக்கில் சாந்தையும் விநாயகர் ஆலயமும் ( ஆய்வுக்கட்டுரை)
ஆய்வு செய்தவர் : திரு.த. குணத்திலகம்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்,
சாந்தை,
பண்டத்தரிப்பு.
ஈழத்திருநாட்டின் சிரசாம் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாண நன்நகரின் முகமென தோன்றும் மேற்குக் கரையோரத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க ஜம்புகோளத்துறையை அண்டிய பண்டத்தரிப்புப் பிரதேசத்தில் செந்நெல் கொழிக்கும் தும்பளப்பாய் வயல் வெளியுடன் கூடிய சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஒரு அழகிய கிராமம் சாந்தையாகும். இங்கு கோயில் கொண்டிருப்பவர் அருள்மிகு சித்தி விநாயகராவார். இக் கோயில் எந்தக் காலத்தது என்பது திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. எனினும் இலங்கையின் சரித்திரத்தை ஆராயும் பொது இது மிகவும் பழமை வாய்ந்தத்தாகக் கருத இடமுண்டு.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு இலங்கையை ஆண்ட மன்னன் தேவநம்பியதீசன் இந்துசமயத்தவன். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஒரு நாகரீக இனம் நாகர் இனமாகும். இவர்களும் இந்து சமயிகளாவர். அனுராதபுரத்தை ஆண்ட மூத்த சிவன் யாழ்பாணத்தின் கதிரமலையின் அரசாண்ட நாகர் குலத்தில் திருமணம் செய்தான் எனவும், அவர்களின் புதல்வனே தேவநம்பியதீசன் எனவும் மிகப்பழம் சிங்கள இலக்கிய நூலாகிய மகாவம்சம் கூறுகிறது.
இந்தியாவிலிருந்து வந்த மகிந்ததேரர் என்னும் புத்தபிக்குவின் உபதேசத்தில் மனம் மாறிய தேவநம்பியதீசன் புத்தசமயத்தைத் தழுவிக் கொண்டான் இருப்பினும் தீவிர சைவர்கள் தம்மதத்தை விட்டுக் கொடுக்காது சைவசமயத்தை கடைப்பிடித்தனர் என மகாவம்சம் கூறுகிறது. Read the rest of this entry »
சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் லங்காபுரியின் தலையாக பிரகாசிக்கும் யாழ்ப்பாண குடாநாட்டின் வலிகாமம் மேற்கு பகுதியில் பண்டத்தரிப்பு எனப்படும் பழம் பெரும் பட்டினத்துக்குள் இயற்க்கை எழில் பொருந்திய விவசாய பெரும் நிலபரப்புகளும் (வயல்) விண்ணை முட்டும் அரசும்.ஆலும்.மரதமரமும் ஒன்று இணைந்து உறவாடும் சாந்தை என்னும் திவ்விய சேஷ்த்திரத்தில் அமைந்துள்ளது சாந்தை சித்தி விநாயகர் ஆலயம். Read the rest of this entry »
பாரதத்திருநாட்டின் பாதச்சுவட்டில் இலங்கும் இலங்காபுரி தன்னில் தமிழீழ மண்ணின் வடபால் மணவை என்று அழைக்கப்பெறும் யாழ்ப்பாணத் திருநாட்டின் பல்வளமும் பாங்குறவே மிளிரும் வலிமேற்கின் சிகரமான சங்கானையம்பதியின் மேற்குப் புறமாக விளங்கும் பண்டத்தரிப்பு சாந்தையம் பதியில் உறையும் சித்திவிநாயகரின் பெருமை பற்றி எம்பெருமான் ஆசியோடு உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றேன். Read the rest of this entry »