இறுவெட்டு
அருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031
அன்னதான சபை

விநாயகர் பெருமை

 

ஒருமுறை நாரதர் ஒரு மாம்பழத்தை சிவபெருமானுக்குக் கொடுத்தார். உடனே சிவபெருமான் அந்த மாம்பழத்தை தம் மகன்களில் யாருக்கு கொடுப்பது என பிரம்மனிடம் யோசனை கேட்டார். உடனே பிரம்மன் முருகப்பெருமானுக்கு அளிக்கலாம் என்று சொல்ல அதனைக் கேட்ட விநாயகர் கோபம் கொண்டார்.

அந்த நிகழ்ச்சிகளைக் கண்டு சந்திரன் சிரித்தான். இதனால் விநாயகருக்கு மேலும் கோபம் வந்து விட்டது. “பெரியோர் முன்னிலையில் என்னைச் சிரித்து கேலி செய்த உனது ஒளி உலகில் பரவாதிருக்கக் கடவது” என சபித்தார். பிறகு அவர் அதற்கொரு பரிகாரமும் சொன்னார்.

ஆவணி சதுர்த்தியன்று சந்திரனைப் பாராமல் தன்னைச் சிறப்பாக பூஜிக்கின்றவர்கள் தம் அருளைப் பூரணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனகூறி அருளினார். அது முதல் ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற மரபு தோன்றியது.

சங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். Read the rest of this entry »

ஆற்றங்கரை படித்துறையை கடந்து மேலேறி வந்தால் அரசமர மேடை அந்த மேடையில் ஏகாந்தமாக அமர்ந்திருக்கும் ஒற்றை பிள்ளையார் அவரை சுற்றி பிள்ளைகள் ஊதிவிட்டு போட்ட பூவரச இலை ஊதுகுழல்கள், ஆற்றில் குளித்து விட்டு பெண்கள் மறந்து வைத்து போன மஞ்சள் கொம்புகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி மூச்சை ஆழமாக உள்யிளுத்து சிந்தனை தேரை செலுத்தி பாருங்கள் உங்களுக்குள் ஆயிரமாயிரம்..,
மேலும் படிக்க… Read the rest of this entry »

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான். Read the rest of this entry »

விநாயகப் பெருமானை நினைந்து வேண்டுதல் செய்யும் பெண்கள் ஆடி, தை மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை நான்கு மணிக்கே எண்ணை தேய்த்து முழுகி ஆசாரமாகப் பட்டுடுத்தி ஈனாக் கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்துச் செவ்வரத்தை செவ்வலரி, அறுகு கொண்டு பூசிப்பார்கள். தாழைமடல், நெற்கதிர் இவைகளைப் பரப்பி கொழுக்கட்டை சுட்டுவைத்து வழிபடுவார்கள். இப்படி வழிபடுவதனால் இடையூறுகள் நீங்கும். செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதற்குச் செவிவழிச் செய்தியாக ஒரு கதை உண்டு. அரசன் ஒருவனுக்கு அருமைவாய்ந்த அரசகுமாரன் ஒருவன் இருந்தான். அவ்வரசகுமாரன் ஒரு பசுக்கன்றை வளர்த்து வந்தான்..,  Read the rest of this entry »

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. Read the rest of this entry »

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் “சங்கடஹர சதுர்த்தி” நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். “ஹர” என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். Read the rest of this entry »

பூசை நேரங்கள்
poshai
தேர்த்திருப்பணி சபை
பலஸ்தாபன நிகழ்வு
ஆறுமுகநாவலர்
Jothidam
தமிழில் எழுத
பிள்ளையார் கதை
DSC08079-Max-Width-640-Max-Height-480" alt="" width="175" class="aligncenter" />