அம்மன் கோவில்
பணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் திருக்கோயில்.
ஸ்தாபகர் பரம்பரை ஆதீனகர்த்தாக்களும் பிரதம குருமார்களும்,
நமது கிராமிய இணையத்தள நிர்வாகத்தினருக்கு விடுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.
அன்புக்குரிய நமது கிராமிய இணையத்தள நிர்வாகத்தினருக்கு நமது ஆசிகள் உரித்தாகட்டும்.
மேலும் நமது இணையத்தளங்கள் நாம் பிறந்து வளர்ந்த அன்னை மண்ணின் பெருமையையும் புகழையும் உணர்த்தி வளர்ந்து கொண்டிருக்கும் எமது எதிர்கால சமுகத்தின் நல் ஒற்றுமைக்கு வளிகாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்ட ஒரு சமூகத்தினராக இணைந்து கொள்வோம்.
மேலும், ஆலய இணையத்தளங்களை கிராமிய இணையத்தளங்களில் இணைத்துக்கொளுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
www.panippulamamman.com
www.panippulamsrimuthumariamman.com
நன்றி
வணக்கம்
இங்ஙனம்
ஸ்தாபகர் பரம்பரை
ஆதீனகர்த்தாக்களும்
பிரதம குருமார்களும்
07-07-2013
பணிப்புலம்

பணிப்புலம் பதிதனில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய நிகழ்வுகளையும், பூசைகளையும், விழாக்களையும் புலம் பெயர் வாழ், புலம்வாழ் எம் மக்களுக்கு தெரியப் படுத்தும் முகமாக ஆலய ஆதீன கர்த்தாக்களினால் http://panippulamsrimuthumariamman.com/ எனும் இணையத்தளம் உருவாக்கப்பெற்று இணைய வலையில் வலம் வருகிறது என்பதனை அறியத் தருகின்றோம்.