இறுவெட்டு
அருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031
அன்னதான சபை

புனிதப்படுத்துவதால், இரு வகை நன்மைகள் உள்ளன. எந்தப் பொருள் புனிதப்படுத்தப்படுகிறதோ… அதன் புனிதத்தன்மை மேலும் பொலிவு பெறும். இரண்டாவதாக… அப்பொருளிலுள்ள குறைகள் நீங்கும்.
சடங்குகளின் பயன்கள்… கண்களுக்கு புலனாகும் படியும்… புலனாகாதபடியும் அமையலாம்.
உதாரணமாக… ஒரு பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துக் கழுவினால்… அதிலுள்ள அழுக்குகள் மறைந்து… பிரகாசத்தையும் பெறும். இது கண்களுக்குப் புலப்படும் பயன் அல்லது விளைவு.
ஒரு பொருள்… மந்திரம் ஏற்றப்பட்ட நீரால் புனிதம் பெறும். இந்தப் புனிதத்தின் மதிப்பை கண்ணால் அறிந்து கொள்ள முடியாது. மாறாக… உணர முடியும்.
சில குறிப்பிடப்பட்ட சடங்குகளின் மூலம் மனிதன்… தன் உடம்பை புனிதப்படுத்திக் கொள்ள தர்மசாஸ்திரங்கள் கூறியுள்ளன. முக்கியமாக 16 வகையான சடங்குகளை சாஸ்திரங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளன. இந்த சடங்குகளை கடைப்பிடிப்பதன் மூலம்… மனிதன் தன்னை புனிதப்படுத்திக் கொள்ளலாம். சாஸ்திரங்களில் முழு நம்பிக்கை கொண்டவர்கள்… இச் சடங்குகள் மூலம் பயன் பெறலாம்.
ஒவ்வொரு சடங்குகளுக்கும்… ஒவ்வொரு வயது அல்லது காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாஸ்திரங்கள் நிர்ணயித்துள்ள கால அளவில் குறிப்பிட்ட சடங்குகளை நிறைவேற்றினால்… பலன்கள் மிகுதியாக அமையும்.
சில சடங்குகளைச் செய்வதற்கு… குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாமல் போனால்… அவைகளைச் செய்ய… சில மாற்று கால நேரத்தையும் சாஸ்திரங்கள் அனுமதித்துள்ளன.
ஒவ்வொருவரும் தர்ம சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்ற சடங்குகளை குறிப்பிட்டபடி செய்து… அதன் நற்பயன்களை பெற்று உய்வோமாக.

Leave a Reply

பூசை நேரங்கள்
poshai
தேர்த்திருப்பணி சபை
பலஸ்தாபன நிகழ்வு
ஆறுமுகநாவலர்
Jothidam
தமிழில் எழுத
பிள்ளையார் கதை
DSC08079-Max-Width-640-Max-Height-480" alt="" width="175" class="aligncenter" />