இறுவெட்டு
அருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031
அன்னதான சபை

ஆண்டுதோறும் பக்திப்பாடல்களுக்கு முக்கியத்துவம் வழங்கி சாந்தை சித்தி விநாயகரின் வரம் பெற்றவரும்”பக்தி இசை வேந்தன் சாந்தையில் பிறந்து நார்வே நாட்டில் வசிக்கும் ” திரு T.S. ஜெயராஜன் அவர்களின் சித்திரப்புத்தாண்டு வெளியீடுகளான
இலண்டன் செல்வ விநாயகர் பக்திப்பாடல்கள், தாந்தோன்றி ஆஞ்சனேயர் ,பொன்னாலை வரதராஜப் பெருமாள், செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்கள் மேல் பாடப்பெற்ற பக்திப்பாடல்களின் இறுவெட்டுகள் தற்போது வெளியாகி அந்தந்த ஆலயங்களில்
விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. அன்பளிப்புகள் ஆலயத்தின் வளர்ச்சிக்கே சமர்ப்பணம். அன்புள்ளங்கொண்ட ஆன்மீக பக்தர்களே ஆன்மீகப் பணியோடு
சமூகப்பணியையும் தொடர்வதற்கு எமதூர் மைந்தன் ஜெயராஜன் அவர்களை நாமும் சேர்ந்து ஊக்குவிப்போம்.

2 Responses to “சாந்தையில் பிறந்து நார்வே நாட்டில் வசிக்கும் T S ஜெயராஜன் பாடிய பக்த்திப்பாடல்கள் தமிழ் புத்தாண்டில் புதிதாக வெளியாகியுள்ளன”

 • சதா சாந்தை:

  சாந்தையின் புகழும் அழகுமே சாந்தை மக்களுக்கு கிடைத்தவரம் சாந்தையின் புகழும் சாந்தை மக்களின் திறமைகளும் உலகறியச்செய்ய வேண்டும். சாந்தையூர் இன்னிசை வேந்தன் சின்னத்துரை ஜெயராஜன் அவர்களுக்கு சாந்தை மக்களின் பாரட்டுக்களினையும் வாழ்த்துக்களினையும் தெரிவித்துகொள்வதுடன் இன்னும் பல உங்கள் பாடல்களை எமது செவிகள் கேட்க விரும்புகின்றன என்று உரிமையுடன் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். தொடரட்டும் உங்கள் இசை பயணம்.

  சின்னத்துரை மைந்தன் சித்தி விநாயகன் அருள் பெற்று இன்னிசை இசைத்திட எமதூர் ஆளும் நாயகன் சித்தி விநாயகன் அருள் ஆசி புரியட்டும்.

  • T.S. JEYARAJAH:

   அன்பான நண்பனின்
   ஆழமான நட்பிலிருந்து வெளிவருகின்ற
   இனிமையான கருத்துக்கள்.
   ஈடிணையற்ற உள்ளங்களின்
   உண்மையான வாழ்த்துக்கள் என்னை
   ஊக்குவிக்கின்றன.
   நன்றி நண்பனே!

   T.S. JEYARAJAH

Leave a Reply

பூசை நேரங்கள்
poshai
தேர்த்திருப்பணி சபை
பலஸ்தாபன நிகழ்வு
ஆறுமுகநாவலர்
Jothidam
தமிழில் எழுத
பிள்ளையார் கதை
DSC08079-Max-Width-640-Max-Height-480" alt="" width="175" class="aligncenter" />