இறுவெட்டு
அருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031
அன்னதான சபை
 

ஆதிசங்கரரின் அருளுரை

 

 

 • மனிதப்பிறவி, முத்தியில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை கிடைக்கின்றன. 

 •  
 • உபநிஷத வாக்கியங்களில் பொருளை ஆராய்வதால சிறந்த அறிவு பிறக்கின்றது. அதனுடைய தொடர்ச்சியாக சம்சார துக்கத்திற்கு முற்றிலும் அழிவு ஏற்படுகின்றது. 
   
 • உண்மையில் நீ பரமாத்மா. அஞ்ஞானத்தின் காரணமாகத்தான் உனக்கு பந்தமும், அதிலிருந்து பிறவிச் சூழலும் ஏற்பட்டுள்ளன. ஞானத்தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்து விடும். 
   
 • சொற்களின் கூட்டம் ஒரு பெரிய காடு போன்றது. அதுமனதை மயக்கி விடும் ஆகையால் உண்மையை நாடுபவர்கள் அன்மாவைப் பற்றிய உண்மை ஒன்றையே நன் முயற்சியால் அறியவேண்டும். 
   
 • குருநாதரின் கருணை பூரண சந்திரனின் கிரணங்களைப் போலுள்ளது அது விரும்பிய வரத்தை அளிப்பதில் கற்பக மரத்தைப் போலுள்ளது. மனத்திலுள்ள துன்பத்தை அது அறவே போக்கிவிடுகின்து. 
   
 • பிரமமும் ஆன்மாவும் ஒன்றாகிய போது புத்தி காணாமல் போய்விட்டது. செயலில் ஈடுபாடு கரைந்து விட்டது இது, அது என்பதெல்லாம் என்ன என்பது தெரியவில்லை அது என்ன வென்றோ எப்படிப்பட்டது என்றோ தெரியவில்லை. அந்த நிலையில் அளவு கடந்த இன்பம் மட்டும் இருப்பதை உணர்கின்றேன். 
   
 • ஞான விழிப்பு உண்டானதும் இந்த உலகம் எங்கே போயிற்று.? யாரால் கொண்டுபோகப்பட்டது? எங்கு மறைந்தது. இப்போது இருந்தது. மறுகணம் இல்லை இது என்ன ஆச்சரியம். 
   
 • எப்படி ஒளியின் உதவி இல்லாமல் எதையும் பார்கக முடியாதோ. அதேபோல் ஆராச்சி இல்லாமல் ஞானத்தைக் காண முடியாது. 
   
 • அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது. 
   
 • கண்ணாடிபோல் மனம் பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனத்தை பரிசுத்தமாக்குவதில். கவனம் செலுத்த வேண்டும். 
   
 • நான் மாசற்றவன், அசைவற்றவன், புனிதனானவன், சாவில்லாதவன் என்றும்  அழிவற்றவன் என்றும் அறிவதுதான் ஞானம் என்று கூறப்படுகின்றது.

Leave a Reply

பூசை நேரங்கள்
poshai
தேர்த்திருப்பணி சபை
பலஸ்தாபன நிகழ்வு
ஆறுமுகநாவலர்
Jothidam
தமிழில் எழுத
பிள்ளையார் கதை
DSC08079-Max-Width-640-Max-Height-480" alt="" width="175" class="aligncenter" />