இறுவெட்டு
அருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031
அன்னதான சபை

பாரதத்திருநாட்டின் பாதச்சுவட்டில் இலங்கும் இலங்காபுரி தன்னில் தமிழீழ மண்ணின் வடபால் மணவை என்று அழைக்கப்பெறும் யாழ்ப்பாணத் திருநாட்டின் பல்வளமும் பாங்குறவே மிளிரும் வலிமேற்கின் சிகரமான சங்கானையம்பதியின் மேற்குப் புறமாக விளங்கும் பண்டத்தரிப்பு சாந்தையம் பதியில் உறையும் சித்திவிநாயகரின் பெருமை பற்றி எம்பெருமான் ஆசியோடு உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்.கிழக்கே பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலையும் ,மேற்கே அழகான வயல்வெளிகளையும் கொண்ட அழகிய எம் ஊரிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது சித்தி விநாயகர் ஆலயம் . தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வியாபாரத்துக்காக வந்த செட்டி இன மக்களே சந்தோசி விநாயகருக்கு இங்கே கோவில் வைத்து வழிபட்டதாகவும் அந்தப்பெயரே நாளடைவில் மருவி சாந்தை விநாயகர் என ஆயிற்று என்பதுவும் வரலாறு.

முதலில் செட்டி இனத்தவரே இந்தக் கோவிலில் பூசைகளை நாடாத்தி வந்தனர்,பின் அவர்களின் வழியே கோவில் திருவாளர் ஆறுமுகச் செட்டியார் அவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டு ,அவரின் காலத்திற்குப் பின்னர் நாமெல்லோரும் நன்றாக அறிந்த ஆசார சீலரான திருவாளர் பஞ்சாட்ச்சரசெட்டியார் (குஞ்சர் ஐயா) அவர்களின் தலைமையில் பூஜாவழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தன. பின்னர் ஐயா அவர்கள் தம் பிள்ளைகளோடு புலம்பெயர் நாடு ஒன்றிற்கு சென்று விட ,தற்போது ஒழுங்கான வகையில் நிர்வாக சபை உருவாக்கப்பட்டு பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூசகர்களால் பூசைகள் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன .

எம்பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.

பல 100ஆண்டுகளுக்கு முன்பு பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டபோது ,எம் ஊரே அழிந்துவிடப்போக இருந்த வேளையில் சீற்றத்துடன் எழுந்து வந்த கடல் அலையை தன் ஒரு கையால் அடித்து கடலின் ஒரு கண்ணைக் குருடாக்கியவர் என்பது செவிவழிக் கதை. இன்றும் அந்தக் கடல் குருட்டுக்கடல் எனவே அழைக்கப்படுகின்றது.அதுமட்டுமல்லாமல் அண்மைக் காலத்தில் ஒருநாள் குழந்தை வடிவிலே எம்பெருமானின் கால்த்தடங்கள் ஆலய மண்டபத்தில் பதிந்திருக்கக் காணப்பட்டது .அயல் ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து இந்த அற்புதத்தைக் கண்ணாரக் கண்டு சென்றனர்.

அப்படிப்பட்ட சிறப்புக்களும் அற்புதங்களையும் கொண்ட எம்பெருமானுக்கு ஊரவர்கள் சேர்ந்து வருடம் தோறும் ஆவணிச் சதுர்த்தியைத் இறுதி நாளாகக் கொண்டு பத்து நாட்கள் அலங்காரத் திருவிழா வெகு சிறப்பாக நடாத்தி வருகின்றார்கள் . அத்தோடு மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு முதல் கொடியேற்றத்தோடு கூடிய திருவிழாவாக நடாத்துவதற்கு எம்பெருமான் அருள்பாலித்துள்ளார். மாதந்தோறும் வளர்பிறைக்காலத்தில் சதுர்த்தி வந்தாலும் ஆவணிமாதத்து சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தி மிகவும் விசேசமானது. அன்றைய தினம் விநாயகரை நினைந்து வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

அப்படிப்பட்ட அருள்வடிவே உருவான சாந்தை சித்தி விநாயகரை உள்ளம் கசிந்து உருகி மெய்யன்போடு வழிபடுபவர்களுக்கு கேட்கும் வரமெல்லாம் அள்ளி வழங்குவார் நாம் வணங்கும் சாந்தை விநாயகர் என்று கூறி,உங்கள் எல்லோருக்கும் எம்பெருமானின் அருள் கிடைக்க வேண்டி இத்துடன் எனது ஆக்கத்தினை நிறைவு செய்கின்றேன் .ஓம் சித்திவினாயகாய நமக .

ஆக்கம்: வினோதினி பத்மநாதன்.

Leave a Reply

பூசை நேரங்கள்
poshai
தேர்த்திருப்பணி சபை
பலஸ்தாபன நிகழ்வு
ஆறுமுகநாவலர்
Jothidam
தமிழில் எழுத
பிள்ளையார் கதை
DSC08079-Max-Width-640-Max-Height-480" alt="" width="175" class="aligncenter" />